மட்டு மாவட்ட செயலகத்திற்கு மாடுகளே செல்லும்!
மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தரக் கூறி சுழற்சி முறையிலான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 9 மணி முதல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய முன்தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய கூட்டத்தின் போது மேச்சல் தரை தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜ தெரிவித்ததை அடுத்து தங்களது மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக் கூறி போராடி வருகின்றனர்.
கிழக்கில் அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றம் காரணமாக பெருமளவில் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பால் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பெரும்பான்மை இனத்தவர்களை மேய்ச்சல் தரைகளாக காணப்படும் பகுதிகளில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் காணிகளை ஆக்கிரமித்துவருகின்றனர்.
இன்று பண்ணையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்க உள்ளதாகவும் அதற்கான தீர்வு கிட்டாத பட்சத்தில் கால்நடைகளைக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
Post a Comment