அகழ்விற்கு விடுமுறை!முல்லைத்தீவின் மனிதப்புதை குழியின் ஒன்பதாவதுநாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்ற நிலையில், இதுவரை 17 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினமும் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடு ஒன்றும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரடெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பித்து இன்றுடன் (15) ஒன்பது நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றுடன் மொத்தமாக 17 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்படுகின்றது.

அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ராஜ்சோமதேவ குழுவினர் அவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு செல்ல இருப்பதன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது.

இன்னும் ஒரு சில வாரங்களில் ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.


No comments