சர்வதேச விசாரணை:சரத் ஆதரவு!
சனல்-4 தொலைக்காட்சி ஊடாக, அசாத் மௌலான வெளியிட்ட விடயங்கள் தொடர்பில், வெளிநாட்டு பங்களிப்போடு, சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இரா.துரைரட்டனம் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை கிழக்கின் சொந்த மக்களை கொல்ல பிள்ளையான் பணித்தமை தொடர்பிலும் இரா,துரைரத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது என எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "சர்வதேச விசாரணை நடத்த சிறிலங்கா அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்," என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை "ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஸ் சாலி ஈடுபட்டுள்ளார் என்பதை நான் நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சனல் 4 வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜபக்சர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதாகும்.ராஜபக்ச்ர்களுக்கு எதிராக குறித்த சனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே பொய்கள் ஆகும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment