குடமுருட்டி:சோலார் மின்வலயம்!கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனையில் இந்திய அதானி குழு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ள நிலையில் பூநகரியில் அவுஸ்திரேலிய நிதி ஒதுக்கீட்டில் சூரிய ஒளியிலான சோலார் மின்வலயம் அமையவுள்ளமை தெரியவந்துள்ளது.பரந்தன் பூநகரி வீதியிலுள்ள குடமுருட்டி பாலத்தை அண்டி பாரிய சூரிய ஒளியிலான சோலார் மின்வலயம் அமையவுள்ளது.

இதனிடையே மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு தொடர்ச்சியாக மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு ஆதரவாக இன்றைய தினம் காலை 11 மணியளவில் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் மன்னார் மாவட்ட வேலையற்றோர் சங்கம் என்ற பெயரில் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

நடுக்குடா உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணியை தாமதம் இன்றி முன்னெடுக்க வேண்டும் என்றும், அதனால் வேலை இல்லாத பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்த போராட்டக்கார்கள், பொது அமைப்புக்கள் தமது இலாப நோக்கத்துக்காகவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

இதனிடையே காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு ஆதரவாக மன்னாரில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டால் காற்றாலை மின் உற்பத்தி திட்ட பணியில் வேலை பெற்று தருவதாக கூறிய நிலையில், தாங்கள் கலந்து கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.


No comments