சுட்டு கொல்லப்பட்டார்களா?

 


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விடத்தில் மேலும் புதிய எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது இரண்டாவது நாளாக இன்றையதினமும் இடம்பெற்ற.

அதன்போதும் மேலதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் நாளை அகழ்ந்தெடுக்கப்படும்.

இன்று வேறு சில முக்கியமான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் உலோகத் துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி ஏனைய கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் பகுத்தறிந்ததன் பிற்பாடே அறியத்தரப்படும். எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் முழுவதுமாக இன்னும் எடுக்கப்படவில்லை பகுதியளவிலேயே எடுக்கப்பட்டுள்ளது. உடுப்புக்களில் சில தடயம் இருக்கின்றது. அதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் தான் இது தொடர்பாக கூறமுடியும். 

மனிதப் புதைகுழிக்குள் இருந்து தான் துப்பாக்கிச் சன்னம் எடுக்கப்பட்டது. இரண்டு துண்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. அது துப்பாக்கிச் சன்னம் என்றே சந்தேகிக்கப்படுகின்றது. அது பகுப்பாய்வு செய்ததன் பின்னர் தான் தெரிவிக்க முடியும்” எனவும் சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


No comments