புலிகள் பாணி சிகிச்சை: மூக்குடைபட்ட இந்தியா?



விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கத்தை புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் தடுப்பதில் முன்னின்ற இந்திய புலானய்வு கட்டமைப்பு கனடாவில் அதே பாணி கொலைகளை செய்ய முற்பட்டு மூக்குடைபட்டுள்ளது.

2009இன் பின்னராக புலம்பெயர் தேசத்தில் உருவாக இருந்த அடுத்த கட்ட தலைவர்களை கொன்றும் பேரம் பேசியும் வென்ற இந்திய உளவு கட்டமைப்பே தற்போது மூக்குடைபட்டுள்ளது.

 இந்தியாவினால் தடைசெய்ப்பட்ட காலிஸ்தான் புலிகள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டளார் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக கனடா குற்றம் சுமத்தியுள்ளது.

Hardeep Singh Nijjar. என்பவர் கடந்த ஜூன் மாதம் Vancover இல் சுட்டுக் கொல்லபட்டார். இவருடைய கொலையுடன் இந்திய உளவு அமைப்பு தொடர்பு பட்டமை புலனாய்வு பிரிவின் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்

இந்த விடயத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக உயர் அதிகாரி ஒருவரை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் உத்தரவினை இந்திய வெளியுறவுத் துறை பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான இராஜதந்திர முறுகலை; நிலையை தோற்றுவித்துள்ளது.

No comments