ஈஸ்டர் தாக்குதல் சதியை இனி மறைக்க முடியாது!குற்ற புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர்  ரவி செனவிரத்ன  தொலைக்காட்சி விவாதத்தில் ஈஸ்டர் 19,  தாக்குதல் சதி தொடர்பான மேலும் பல விடயங்களை அம்பலப்படுத்தி  இருக்கின்றார் 

குறிப்பாக சுரேஷ் சாலே தொடர்புடைய இராணுவ புலனாய்வு பிரிவு தலையீடு செய்து தடுத்த  5 விடயங்களை உறுதிப்படுத்தி  இருக்கின்றார் 

நீதிமன்ற உத்தரவுகளிருந்தும்   மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதையும் எந்த தாக்குதல் குறித்து தகவல்களை அவரிடமிருந்து பெற முடியவில்லை என்பதையும்  அம்பலப்படுத்தி இருக்கின்றார் 

தாக்குதல்தாரிகளுடன் தொடர்பிலிருந்த ‘sonic-sonic’ என அடையாளப்படுத்தப்படும்  இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்  தொடர்பான விசாரணைகளை புலனாய்வு பிரிவினர் தடுத்ததாக சொல்லி இருக்கின்றார் 

ஈஸ்டர் 19, தாக்குதலுடன் தொடர்புடைய அபூஹிதை அடையாளம் காணும் தனது முயற்சிகளுக்கு  இராணுவ புலனாய்வு பிரிவினர் தடை மற்றும் நெருக்கடிகளை ஏற்படுத்தியதை வெளிப்படுத்தி இருக்கின்றார் 

வண்ணாத்திவில்லு பிரதேசத்தில்  வெடிபொருட்கள் கணடுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு சென்ற போது  இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில  இருந்தனர் என்பதை உறுதி செய்து இருக்கின்றார் 

ஈஸ்டர் 19, தாக்குதல்தாரிகள் சம்பந்தப்பட்ட வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பி போலியான சான்றுகளை  இராணுவ புலனாய்வு பிரிவினர் உருவாக்கினார் என அம்பலப்படுத்தி இருக்கின்றார் 

இன்றைய நிலவரப்படி, 

இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் ஈஸ்டர் 19,  தாக்குதல் ஒரு சதி என்பதை உறுதி செய்கின்றார் 

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரவி செனவிரத்ன,ஷானி அபேசேகர நிசாந்த சில்வா ஆகியோர் மேற்படி சதியில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தொடர்பு இருந்ததாக  சொல்லுகின்றார்கள் 

குறிப்பாக பிள்ளையான் குழு போல சஹ்ரான  குழுவினரும்   இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்ததாக  உறுதி செய்கின்றார்கள்  

இவர்களை சுரேஷ் சாலே தான் வழிநடாத்தியதாக  தெளிவுபடுத்துகின்றார்கள் 

குறிப்பாக இலங்கை சட்ட மா அதிபர்  மற்றும் குற்ற புலனாய்வு அதிகாரிகளும் முன்வைக்கும் சான்றுகள் அசாத் மௌலானாவின் சாட்சியங்களுடன்  ஒத்துப்போகின்றன 

No comments