பெல்ஜியத்தில் தொடரும் 5வது நாள் ஈருறுளிக் கவனயீர்ப்புப் போராட்டம்


ஜெனீவாவில் நடைபெறவுள்ள 54 வது கூட்டத்தொடரை முன்னிட்டு, தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம் 5வது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று திங்கட்கிழமை பெல்ஜியம் அன்வெர்ப்பன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவிடத்திலிருந்து 5ஆம் நாள் போராட்டம் ஆரம்பமானது.

ஈருறுளிப் கவனயீர்ப்புப் போராட்டம் மதியம் தலைநகர் புறூசல்ஸ் நகருக்குச் சென்றடைந்தது.

ஈருறுளிப் போராட்டமானது பெல்ஜியத்திலிருந்து லுக்சம்பேர்க், பிரான்ஸ், ஜேர்மனி ஊடாக ஜெனீவாவை சென்றடையவுள்ளது.



No comments