வெள்ளத்தில் ஸ்பெயின்


காலநிலை மாற்றத்தால் மத்திய ஸ்பெயினில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் அதிவேக தொடருந்து இணைப்புகள் மூடப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் மூன்று பேர் காணவில்லை என்று அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.

மாட்ரிட்டில் இருந்து தென்மேற்கே சுமார் 50 கிமீ (31 மைல்) தொலைவில் உள்ள டோலிடோ பகுதியில் வீடுகளின் கூரைகளில் தஞ்சம் புகுந்த மக்களை மீட்க உலங்கு வானூர்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்தன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று திங்கட்கிழமை அதிகாலை வரை பெய்த திடீர் மழையால் மாட்ரிட், காஸ்டில்-லா மஞ்சா, கேடலோனியா மற்றும் வலென்சியா பகுதிகளில் வாகங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளை அடித்துச் சென்றதுடன் மண் ஆறுகளாக வீதிகள் காட்சியளித்தன.  பல பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.


No comments