தெல்லிப்பழையில் உணவக உரிமையாளர்களுக்கு தண்டம்


உணவகங்களில் திகதி காலாவதியான உணவு பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக உணவக உரிமையாளர்களுக்கு எதிரான வழக்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில், காலவதி திகதி முடிவுற்ற மற்றும் தவறான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 6 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  

வழக்கு விசாரணைகளின் போது , உணவக உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து , 06 பேருக்கும் தலா 02 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம் நீதிமன்றினால் விதிக்கப்பட்டது. 

No comments