காவல்துறை நாய் ஒரு மில்லியன் யூரோக்களை கண்டுபிடித்தது


இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் என்ற நகரின் அருகே அமைந்துள்ள பேருந்தில் ஒரு மில்லியன் யூரோக்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

நேற்றுப் புதன்கிழமை இத்தாலியக் காவல்துறையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் பேருந்தை மோப்ப நாயுடன் சோதனை நடத்தியபோதே இப்பணம் கண்டு பிடிக்கப்பட்டது.

மோப்ப நாய் பேருந்தின் பயணிகள் பயணப்பையில் உள்ள பகுதியில் தேடுதலை நடத்தியது. இதன்போது இரு பயணப்பொதிகள் நிறைய யூரோ தாள்கள் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்தன.

பணத்தை எலியே என்று அழைக்கப்படும் கறுப்பு லப்ரடோர்  என்ற நாயே ​​€1,075,600 (£920,000) பணத்தை மோப்பம் பிடித்து கண்டெடுத்தது.

பயணப்பையின் உரிமையாளர் இத்தாலியில் வசிக்கும் சீனப்பெண் என அடையாளம் காணப்பட்டது. சீனப் பெண் பணம் எவ்வாறு கிடைத்தது தொடர்பில் விளக்கம் அளிக்க முடியாமல் இருந்ததால் அவரை தற்காலிகமாக கைது செய்து காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

No comments