பிரேசில் காவல்துறையின் தாக்குதலில் 44 பேர் பலி!


பிரேசிலில் இரண்டு போதைப்பொருள் கும்பல்கள் மீது நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் போது  ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரியோ ஜெனிரோவில் 9 பேர் உட்பட்ட பிரேசில் முழுவதும்  44 பேர் உயிரிழந்துள்ளனர்.

பென்ஹா சேரி வளாகப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்துள்ளனர் என மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிற்சைகள் பலனின்றி ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

ரியோ நடவடிக்கையின் போது உயிர் இழந்தவர்களில் "ஃபீல்" மற்றும் "டு லெம்" என்று அழைக்கப்படும் இரண்டு போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் அடங்குவர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஏழு துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். 


No comments