இத்தாலி லம்பேடுசாவில் கப்பல் விபத்து 41 பேர் பலி!!


இத்தாலியின் லம்பெடுசா தீவில் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் 41 அகதிகள் உயிரிழந்தாக இத்தாலிய ஊடகங்கள் இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர் பிழைத்தவர்களை மேற்கோள் காட்டியே செய்திகள் வெளியாகின.

துனிசிய நகரமான Sfax இல் இருந்து இத்தாலிக்கு கப்பல் புறப்பட்டது. அக்கப்பலில்  ஐவரி கோஸ்ட் மற்றும் கினியாவைச் சேர்ந்த மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண், மூன்று குழந்தைகள் உட்பட 45 அகதிகள் பயணித்துள்ளனர்.

கப்பலானது 6 மணி நேரம் பயணித்துள்ளது. பொிய அலை ஒன்றினால் கப்பல் கவிழ்க்கப்பட்டது என தப்பிய அகதிகள் கூறுகின்றனர். 

சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 15 பேர் மட்டுமே பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருந்தனர். ஆனால் அவர்களும் நீரில் மூழ்கி இறந்ததாக உயிர் பிழைத்த நால்வர் தெரிவித்தனர். 

உயிர் பிழைத்தவர்கள் மால்டாவின் சரக்குக் கப்பலால் மீட்கப்பட்டு, இத்தாலிய கடலோரக் காவல்படையினரால் லம்பேடுசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் அவர்கள் அதிர்ச்சியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


No comments