3பேர் சென்றனர்:9பேர் அனுப்பப்பட்டனர்!இலங்கை கடற்தொழிலாளர்கள் மூன்று பேர் சந்தேகத்திற்கிடமான நிலையில் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் - எழுவைதீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை  படகில் மீன்பிடிக்க சென்ற மூன்று கடற்தொழிலாளர்களும் மதியம் இயந்திரம் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் ஆனைகோட்டை, குருநகர் மற்றும் வல்வட்டிதுறை பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலாளர்களே தமிழகம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலார்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில்; மீனவர்கள் 09 பேரும் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன்போது, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 09 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட கடற்தொழிலார்களை மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


No comments