மீண்டும் வெள்ளவத்தையும் தமிழீழத்தில்!

 


தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஸ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட எம்.பி.யான சி.சிறீதரன்  ஜனாதிபதியிடம் நேரில் சவால் விடுத்துள்ளார்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஒன்று வரக்  கூடாது என்பதே  தெற்கின் கருத்தாக உள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண எத்தனை சிங்கள தலைவர்கள் தயாராக இருக்கின்றீர்கள்?   

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா?,சமஸ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா? என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்ககளிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசு தயாரா ? என சி.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நான்  தயாராகவுள்ளேன், தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை நான் அறிந்துள்ளேன் என கருத்து தெரிவித்துள்ளார்.


No comments