தென்னிலங்கை தெரிவு ஒன்றே



யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இரண்டாவது தடவையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

முன்னதாக பலத்த போட்டியின் மத்தியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பேரவையினில் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் அவரிற்கான பிரதான போட்டியாளராக பேராசிரியர் வேல்நம்பி இருந்திருந்த நிலையில் வாக்குகள் அடிப்படையில் மூவர் ஜனாதிபதியின் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இரண்டாவது தடவையாக மீண்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் தடவை துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்திருந்தார்.


No comments