பசறையில் தேர் மின் வடத்தில் தொடுகையுற்றதால் இருவர் உயிரிழப்பு


பசறை நமுனுகுல கந்தேஹேன கதிர்காமம் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 பூடவத்தை நமுணுகுல பகுதியைச் சேர்ந்த கணேசன் ரமேஷ் (வயது 37) மற்றும் பன்னீர் செல்வகுமார் (வயது 27) ஆகிய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து பசறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 கந்தேஹேன கதிர்காமம் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்றைய தினம் புதன்கிழமை மாலை புறப்பட்ட தேர் பெரஹர கந்தேஹேன, தேவதுர, பூட்டாவத்த ஆகிய கிராமங்களின் ஊடாக பயணித்த வேளை பூட்டாவத்த பகுதியில் குறித்த தேர் உயர் அழுத்த மின் வடத்தில் தெடுகையுற்றதால் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments