பிரிகோஜினுக்கு செயின்ட் பீற்றர் பேர்க்கில் அஞ்சலி


விமான விபத்தில் கொல்லப்பட்டதாக கருதப்படும் வாக்னரின் பிரிகோஜினுக்கு செயின்ட் பீட்டர்ஸ் பேர்க்கில் மலர்கள் வைத்து மெழுகுவர்த்தில் ஏற்றி ஆதரவார்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டமை குறித்து கிரெம்ளின் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

வாக்னர் குழுவின் தலைவரும் நிறுவனருமான யெவ்ஜெனி பிரிகோஜின் நேற்றுப் புதன்கிழமை இரவு  சென் பீற்றர் பேர்க்கிருந்து மொஸ்கோ நோக்கி வணிக விமானத்தில் பயணித்தபோது, மொஸ்கோவிலிருந்து வடக்கே 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் உள்ள டிவெரில் உள்ள குசென்கினோ கிராமத்திற்கு அருகே ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது.

யெவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர் எம்ப்ரேயர் - 135 (EBM-135BJ) ஜெட் விமானத்தில் இருந்தனர்.

அத்துடன் 3 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

வாக்னர் குழுவின் செயற்பாடுகளை நிர்வகிக்கும் பிரிகோஜினின் கூட்டாளியான டிமிட்ரி உட்கினும் பிரிகோஜினுடன் பயணித்தாகக் கூறப்பட்டுள்ளது.

வாக்னர் குழுவுடன் இணைந்த டெலிகிராம் சேனல்  கிரே சோன் பிரிகோஜினின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவரை ஒரு ஹீரோ மற்றும் தேசபக்தர் என்று அழைத்தது. 

ரஷ்யாவால் அடையாளம் தெரியாத துரோகிகளிள் கைகளால் அவர் கொல்லப்பட்டார் என்று அந்த இடுகையில் தெரிவிக்கப்பட்டது.

விமானம் விழுந்த இடத்தில் முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டன. அவ்விடத்தில் 8 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் RIA நோவோஸ்டி தெரிவித்துள்ளது. 

No comments