குமுதினி மீண்டும் சேவையை ஆரம்பித்தது
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நேற்றைய தினம் புதன்கிழமை மாலை குமுதினிப் படகு குறிகாட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு குறிகாட்டுவான் நோக்கிப் புறப்பட்டு தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு மீள சேவையை ஆரம்பித்துள்ளது.
குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment