சுருதி கொஞ்சம் கூடிப்போச்சு!கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது தேசிய கீதத்தை திரிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாடகி உமாரா சிங்கவன்ச,  விசாரணைப் பிரிவுக்கு நேற்று (7) வந்ததாக தெரிவித்தார்.

தேசிய கீதம் குறைந்த தொனியில் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் புலனாய்வுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை  சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரிக்க அமைச்சு உத்தேசித்துள்ளது.

உமாரா சிங்கவன்சவும் தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து தனது முகநூல் கணக்கில் மன்னிப்புக் கடிதம் ஒன்றை பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments