என்ன செய்யப்போகிறோம்?



குருந்தூர்மலை ஆதி ஐயனார் கோவில் வளாகத்தில் என்ன செய்யலாமென தமிழ் பதிவர் வெளியிட்டுள்ள கருத்தில்

"குருந்தூர்மலை ஆதி ஐயனார் கோவில் வளாகத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தி ராஜமஹா விகாரை கட்டப்பட்டு இருக்கின்றது 

அங்கிருந்த புராதன ஆதி சிவன் சூலாயுதம் உட்பட சைவ மரபு சின்னங்கள் நிர்மூலமாக்க பட்டுத்தான் இந்த விகாரை கட்டப்பட்டு இருக்கின்றது 

தற்போது  குருந்தி ராஜமஹா விகாரை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை நியாயப்படுத்த அப் பகுதியில் சிறிய சிவாலயமொன்றை அமைக்க அனுமதிப்பதாக பிக்குகள் பேரம் பேசுகின்றார்கள் 

ஆனால் குருந்தூர் மலை  தமிழர்களின் பூர்வீக பகுதி என்பதுடன் அங்குள்ள  தெய்வங்களை அக்கிராம மக்கள் பூர்வீகமாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள் 

குறிப்பாக  அங்குள்ள எச்சங்களும், சிதைவுகளும் வரலாற்று ரீதியாக  2,300 ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது 

அங்குள்ள எழுத்துக்கள்  இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது 

அதே நேரம் குறித்த  மலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுமுகம் தாரலிங்கம் என  சொல்லப்படுகின்றது 

மேற்படி வரலாற்று உண்மைகளை மறுத்து விட்டு  குருந்தனூர் மலையில் வைத்தே பௌத்த இதிகாசங்களில் ஒன்றான குருந்தி இதிகாசம் சிங்கள மொழியில் எழுதப்பட்டு இருப்பதாக சொல்லுகின்றார்கள் 

சிங்களமொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தான் வழங்குமொழியாகப் உருவாகியது 

13 ம் நூற்றாண்டில் தான் முதலாவது சிங்கள இலக்கண நூல் எழுதப்பட்டு இருக்கின்றது 

ஆனால் கிறிஸ்துக்கு முன்னரான  காலமொன்றில் குருந்தி இதிகாசம் சிங்கள மொழியில் குருந்தூர் மலையில் வைத்து எழுதியதாக கதை சொல்லுகின்றார்கள் 

அதே போல மகாவம்சத்தில் குருந்தூர் மலை பற்றி சொல்லப்பட்டு இருப்பதாக சொல்லுகின்றார்கள் 

மகாவம்சம் பாளிமொழியில் எழுதப்பட்ட ஒருபுனைகதை. புனைகதையைப் புனைகதையாகவே நாம் ஏற்க வேண்டும் . அதில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை புனைகதையாக மட்டுமே அணுக முடியும் 

இவ்வாறன வரலாற்றுப்புரட்டுகளை முன்வைத்து  நீதிமன்ற உத்தரவுகளை மீறி கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை நாங்கள் ஏன் ஏற்று கொள்ள வேண்டும் 

நல்லிணக்கம் என்கிற பெயரில் மேற்படி சட்டவிரோத கட்டுமானத்தை ஏற்று ஏற்று  பிக்கு கட்டி தரும் சிறிய சிவாலயத்திற்கு துணை போனால் விகாரையை மையப்படுத்திய பௌத்த மயமாக்களிலிருந்தோ அல்லது சிங்கள குடியேற்றங்களையோ தடுக்க முடியுமா 

இதுமட்டுமின்றி திருகோணேஸ்வரம் , திருகேதீஸ்வரம், உள்ளடங்களாக ஐம்பதுக்கு மேற்பட்ட புராதன சைவ ஆலயங்களில் பௌத்த சின்னங்கள் இருப்பதாக சொல்லுகின்றார்கள் 

மேற்படி கோவில் வளாகங்கள்  எங்கும் விகாரைகளை கட்டி விட்டு அதன் எல்லைகளில் சிறிய கோவில் கட்ட அனுமதிக்கின்றோம் என சொன்னால் ஏற்று கொள்ள  முடியுமா 

குறிப்பாக திருக்கோணஸ்வர வளாகத்தில் அவர்கள் உரிமை கோருவது போல கோகர்ண விகாரையை விட்டு சிறிய சிவன் கோவில் கட்டி தருவதாக சொன்னால் என்ன நடக்கும் 

ஆகவே பிக்குகளுடன் சேர்ந்து கொண்டு வேறு தரப்புகளின் தேவைகளுக்காக மறவன்புலோ சச்சியானந்தன் ஆடும் நாடகங்களுக்கு ஒருபோதும் நாங்கள் துணை போக கூடாது

இங்கே தமிழ் மொழியும் சைவ மதமும் புத்தர் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்தவை என்பதோடு  இங்குள்ள ஐந்து ஈஸ்வரங்களும் புத்தகாலத்திற்கு முற்பட்டவை என்பதை நினைவில் வைத்து இருக்க வேண்டும் 

எனவே சட்டவிரோத கட்டுமானங்களை ஏற்று நல்லிணக்கத்தை கொண்டு வர நாங்கள் முயற்சிக்க வேண்டியதில்லை"

No comments