குழிதோண்ட காசில்லை!
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என இன்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
முன்னதாக புதைகுழி அகழ்விற்கான நிதியை வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று 21ஆம் திகதி மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்க இருந்த நிலையில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அதற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆதனால் உடனடியாக அகழ்வு பணியை மேற்கொள்ளமுடியாத நிலை இருப்பதாக நீதிமன்றத்தில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஆதனை தொடர்ந்த வழக்கு ஓகஸ்ட் மாதம் 31 திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகாமல் இருந்த முல்லைதீவு மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களை சார்ந்த அதிகாரிகளையும் அடுத்த தவணை நீதிமன்றில் கட்டாயம் பிரசன்னமாகியிருக்க வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் சரணடைந்த முன்னாள் போராளிகள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாமென்ற சந்தேகத்தின் மத்தியில் அரசு நிதி முடக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
Post a Comment