5.5 பில்லியன் ரூபாய் செலவில் சிறை கைதிகளுக்கு உணவு


அண்மைக் காலமாக நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 29000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், மேலதிக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

இது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கையின் 2 மடங்காகும்.

இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள்.

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்கும் நோக்கில் 20 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. 

சிறைக்கைதிகளின் உணவு தேவைக்காக மாத்திரம் வருடாந்தம் 5.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

No comments