யாழில். வீடுடைத்து கொள்ளையிட்ட குற்றத்தில் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.நகர் பகுதியை அண்டிய பகுதி ஒன்றில் உள்ள வீடொன்றினை கடந்த 30ஆம் திகதி உடைத்து , வீட்டில் இருந்த சுமார் 2 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
நகை கொள்ளை தொடர்பில் உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment