வறட்சியால் 2 இலட்சத்து 50ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையினால் இதுவரை 72 ஆயிரத்து 100 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரட்சியின் காரணமாக சுத்தமான குடிநீரின்றி மக்கள் பாரியளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
அதன்படி, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் 22 ஆயிரத்து 449 குடும்பங்களை சேர்ந்த 71 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 18 ஆயிரத்து 992 குடும்பங்களை சேர்ந்த 63 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment