பாகிஸ்தானில் 54 பேர் பலி!!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ( ஜே.யு.ஐ.எப் கூட்டம்) நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் காவல்துறையை மேற்கோள் காட்டிசெய்தி வெளியிட்டுள்ளது. இதேநேரம் 47 பேர் உயிரிழந்தாகவும் 150 பேர் படுகாயமடைந்தனர் என மற்றொரு செய்தியும் தெரிவித்துள்ளன. மேலும் காயமடைந்தவர்கள், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. JUI-F கட்சி பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் கூட்டணி அரசாங்கத்தின் கூட்டாளியாகும்.
Post a Comment