டென்மார்க்கில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிப்பு


டென்மார்க் நாட்டுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை சிறிய குழுவினர் எரித்தனர்.

குரான் எரிப்புக்கு டென்மார்க்கில் உள்ள தீவிர வலதுசாரிக் குழுவான டேனிஸ் தேசபக்தர்கள் ("Danish Patriots") ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

ஒரு நபர் முஸ்லிம்களின் புனித நூலை இழிவுபடுத்துவதையும், ஈராக் கொடியை மிதித்ததையும் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியிட்டது.

டென்மார்க்கில் உள்ள ஈராக் தூதரகத்தின் முன் புனித குரானின்  நகல் எரிக்கப்பட்டதை நாங்கள் மீண்டும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என ஈராக்கிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரத்ததிரத்திற்கும் இந்தச் செயலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி இன்று திங்களன்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுடனான சந்திப்புகளின் போது கருத்து வெளியிட்டார். அத்துடன் இது இனவெறி செயல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் அனைத்திற்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்த வகையான செயல்கள் தீவிரவாதம் மற்றும் வெறுப்பின் வைரஸை நிலைநிறுத்துவதாகவும், சமூகங்களின் அமைதியான சகவாழ்வுக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஈராக் வெளியுறவு அமைச்சகம் இன்ற திங்கட்கிழமை கூறியது.

ஏறக்குறைய ஆயிரம் எதிர்ப்பாளர்கள் பாக்தாத்தில் ஒன்று கூடி, டென்மார்க் தூதரகத்திற்கு அணிவகுத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டனர்.

கடந்த வாரம் சுவீடனில் இதுபோன்ற குரான் எரிப்பு நடவடிக்கைக்கு சுவீடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியதும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததை அடுத்து ஈராக்கில் உள்ள சுவீடன் தூதரை வெளியேறுமாறு ஈராக் அறிவித்திருந்தது.

No comments