இத்தாலியின் நான்காவது பொிய மாபியா அமைப்பின் உறுப்பினர்கள் 82 பேர் கைது!!


இத்தாலியின் தெற்கு பிராந்திரமான புக்லியாவில் நான்காவது மாபியாக்கள் என அழைக்கப்படும் சொசைட்டா ஃபொஜியானா "Societa foggiana" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 80 பேரை இத்தாலிய காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்னர்.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களே இன்று திங்கட்கிழமை "கேம் ஓவர்" என்ற குறியீட்டுப் பெயரில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற சோதனையின் போது போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிசிலி, கலாப்ரியா அல்லது நேபிள்ஸ் மாபியாக்களை விட ஃபோஜியா மாஃபியா குறைவாகவே அறியப்படுகிறது. இத்தாலியின் தென்கிழக்கில் கோகோயின் விற்பனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அத்துடன் இத்தாலியில் மூன்றாவது கொலை செய்யும் அமைப்பாகவும் இந்த அமைப்பு இருக்கின்றது.

கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற மூன்றாவது மிகப்பொிய கைது நடவடிக்கைகளை இதுவாகும். இதுவரை சொசைட்டா ஃபொஜியானா உடன் தொடர்புடைய 150 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

No comments