மதுபான விவகாரம்:சுமந்திரனிற்கு எதிராக !
முழங்காவில் மதுபான நிலையத்திற்கு எதிராக நீதிமன்ற படியேறிய எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றில் களம் இறங்கியுள்ளாhர் தென்னிலங்கை முன்னணி சட்டத்தரணி சாலியப் பீரீஸ்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான சாலையை திறப்பதற்கு, நிரந்தர தடையுத்தரவை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது.
முழங்காவில் விநாயகர் ஆலயம், பாடசாலை ஆசிரியர் விடுதி, பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மதுபானசாலையொன்று அமைக்கப்பட்டு திறக்க முற்பட்ட சமயம் பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொதுத் தொல்லை ஏற்படுத்துவதாக தெரிவித்து முழங்காவில் பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு கடந்த 06ஆம் திகதி விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பொது அமைப்புகள் மற்றும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி எஸ்.விஜயராணி உள்ளிட்டோர் முன்னிலையாகியதுடன், பூநகரி பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தரும் முன்னிலையாகி குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலை மற்றும் அருகில் இருக்கின்ற மிகப் பழமையான ஆலயம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இது அமைந்திருப்பதனால் இதனை திறப்பதற்கு தடை உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு விண்ணப்பம் செய்தனர்.
விடயங்களை கருத்தில் எடுத்து அதனை திறப்பதற்கெதிரான இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு; மீண்டும் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த மதுபானசாலைக்கான அனுமதி சுற்றலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டாலும், மதுபானசாலை அமைந்துள்ள சூழல் அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்த மன்று அதனை திறப்பதற்கு, நிரந்தர தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.
இந்நிலையிலேயே மேல்நீதிமன்ற படியேறியுள்ளது மதுபானச்சாலை தரப்பு.
Post a Comment