உலகக் கோப்டை ஆரம்பமாவதற்கு முன் நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! அறுவர் காயம்!


நியூசிலாந்து ஆக்லாந்து கட்டடிடம் கட்டிக்கொண்டிருக்கும் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாகவும் மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 7.20 மணிக்கு நடத்தது. பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இரசிகர் மன்றத்திற்கு அருகில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 

தாக்குதலில் தாக்குதலாளி உட்பட மூவர் கொல்லப்பட்டதாக செயல் காவல்துறை கண்காணிப்பாளர் சன்னி படேல் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய தாக்குதலாளிக்கு அரசியல் அல்லது கருத்தியல் உந்துதல் எதுவும் இல்லை எனவும் இச்சம்பவம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை எனவும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்.

பெண்களுக்கான உலக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் நியூசிலாந்தில் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நோர்வே பெண்கள் உதைபந்தாட்ட தேசிய அணி தங்கியுள்ள விடுத்திக்கு அருகாமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments