யேர்மனி அருங்காட்சியகத்தில் தங்க நாணயங்களை திருடிய நான்கு நபர்கள் கைது!


யேர்மனி பவேரியாவில் உள்ள மன்ச்சிங்கில் உள்ள செல்டிக்-ரோமன் அருங்காட்சியகத்தில் இருந்த கண்கவர் தங்க நாணயங்கள் திருடிய நான்கு சந்தேசக நபர்கள் சம்பவம் நடந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என யேர்மன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யேர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியாவில் அமைந்துள்ள கிரேட்டர் ஸ்வெரின் பகுதியில் காவல்துறையினரின் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பவேரிய குற்றவியல் காவல்துறை அலுவலகம் முச்சனில் (முனிச்சில்) அறிவித்தது.

விசாரணையில், தங்கப் புதையலின் ஒரு பகுதி பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் விவரங்கள் வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1999 இல் மாஞ்சிங்கின் தங்க நாணயங்கள் நகராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் அவை 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய செல்டிக் தங்கக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

நவம்பர் 22, 2022 அன்றிரவு குற்றவாளிகள் மன்ச்சிங்கில் உள்ள செல்டிக்-ரோமன் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து 483 செல்டிக் தங்க நாணயங்களைக் கொண்ட ஒரு பொக்கிஷத்தைத் திருடிச் சென்றனர்.

குறித்த தங்கத்தின் பெறுமதி €1.6 மில்லியன் (€1.8 மில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் 3.7 கிலோ புதையலின் தூய தங்க மதிப்பு சுமார் €250,000 கூறப்படுகிறது.

No comments