மதன் பிடித்த முதலை!

 


கிழக்கில் தனது முதலைபிடித்தல் திட்டம் பற்றி சுற்றுலாத்துறை தலைவராக பொற்றுப்பேற்றுள்ள மதன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்."

"கடந்த வாரம் நாங்கள் பாசிக்குடா ‘தோனா’ பிரச்சினை தொடர்பில் ஆராய வந்தபோது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் அவர்கள், பாசிக்குடாவில் காணப்படுகின்ற ஆபத்தான முதலைகள் தொடர்பில் எம்மிடம் சுட்டிக்காட்டினார். இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்துக்கு நான் கொண்டு சென்றபோது, அம்முதலைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அதற்கிணங்க, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பாசிக்குடா பொறுப்பதிகாரி மாஹிரிடம் கலந்துரையாடியோது, இம்மாதம் 8ஆம் திகதி வனலாகா அதிகாரிகள் வருகைதந்து, பாசிக்குடா முதலைகள் தொடர்பில் ஆராயவுள்ளனர் எனத் தெரிவித்தார். அவர் சொன்னதுபோல் சனிக்கிழமை அவ்வதிகாரிகள் வராதபோதிலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த அதிகாரிகள் பாசிக்குடாவுக்கு வருகைதந்து முதலையொன்றைப் பிடிப்பதற்கான பொறியைப் பொருத்தியிருந்தனர். அந்தப் பொறியில் இன்றைய தினம் சுமார் 6 அடி நீளமுள்ள முதலையொன்று பிடிபட்டது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பாசிக்குடா பணிப்பாளர் கலாநிதி பிரசாத் உட்பட பல அதிகாரிகளும் இன்றைய தினம் பாசிக்குடாவுக்கு வருகைதந்திருந்தனர். இன்று பிடிபட்ட முதலையை குமண வனப் பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது நிரந்தரத் தீர்வாக அமையாது. ஏனெனில் இப்பாசிக்குடாப் பகுதியில் சுமார் 8 முதலைகள் இருக்கின்றன. இவைதவிர குட்டிகளும் பல இருக்கலாமென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகையினால் இவை அனைத்தையும் அகற்றுவதென்பது சாத்தியப்பாடில்லாத விடயம். எனவே, கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆலோசனைக்கிணங்க, குறித்த நீரேந்து பகுதியில் பாதுகாப்பான முறையில் முதலைகள் காப்பகம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதற்கான பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் நாளை (11) காலையில் நடைபெறவுள்ளன. முதலைகள் காப்பகம் உருவாகும் பட்சத்தில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான முறையில் முதலைகளைக் கண்டுகளிப்பதோடு, அவற்றுக்கான உணவூட்டும் வேளைகளில் தங்கள் கரங்களால் உணவூட்டும் வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments