பிரான்பற்றில் கத்திக்குத்து - ஒருவர் உயிரிழப்பு


இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜ்குமார் (வயது 35) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்மீது கத்திக் குத்தும் நடாத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை  உயிரிழந்தார்.

கத்தி குத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் , இருவரை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   

No comments