கட்டபஞ்சாயத்துக்கு கௌரவம்!
இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் நயினாதீவில் ஆட்சி செலுத்திவரும் திஸ்ஸ நாயக்க தேரோ தனது வருகையின் 50வது நினைவுதினத்தை இன்றைய தினம் அனுஸ்டித்துள்ளார்.
நயினாதீவு ராஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ நயினாதீவுக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கான கௌரவிப்பு விழா அரச ஆதருவு தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.
நயினாதீவு மணிமேகலை அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 09 மணியளவில் கௌரவிப்பு விழா இடம்பெற்றது.
விகாரையில் இடம்பெற்ற பூஜைகளுடன் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ தவில் நாதஸ்வர இசையுடனும், கண்டிய நடனத்துடனும் மண்டபத்திற்கு செங்காவி விரிப்பில் அழைத்து செல்லப்பட்டார்.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் கலந்து கொண்டிருந்த அதேவேளை நிகழ்வில் இந்து மற்றும் முஸ்லீம் மதகுருமார்களும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்ற முக்கிய பிரமுகரான தேரர் நாகவிகாரையினை விஸ்தரப்பதில் முக்கிய நபராக உள்ளார்.
இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் குறிக்கடடுவானிலிருந்து நயினாதீவுக்கான படகுகள் சேவைகளையும் தேரரே நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment