முன்னணியின் மூன்றாம் கட்டம் ஆரம்பம்!

 




வலிகாமம் வடக்கினில் தனியார் காணியினை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக மூன்றாவது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் இன்றையதினமும் நடைபெற்றுள்ளது.

இன்றையதினம் திங்கட்கிழமைபோயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று போராட்டம் ஆரம்பமாகி இருந்ததுடன், இன்றையதினமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  போராட்டத்திற்கு இலங்கை காவல்துறையினர் பல்வேறு வகையில் அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.எனினும் தமது போராட்டம் தொடருமென முன்னணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரரும், நாடாளுமன்ற உறுப்பினராமான செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணியில் 2019ம் ஆண்டு முதல் பாரிய விகாரை கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தரப்புக்கள் அப்போது மௌனம் காத்திருந்தமை கேள்விக்குள்ளாகியுள்ளது.


No comments