தேர்தல் ஆணைக்குழுவிற்கே செல்லவில்லை:செல்வம்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின், ஜனநாயகம் என்ற சொல்லை நீக்கி தமிழ் தேசிய கூட்டணி என மாத்திரம் செயற்படவும் அதனை ஆங்கிலத்தில் ரீ.என்.ஏ என அழைப்பதற்கும் விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின், யாப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அந்த செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னரே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தங்களது கோரிக்கைகள் முன்வைக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment