சாம் எப்பவுமே இரட்டை வேடம்!இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இரா.சம்பந்தன் இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வான சமஸ்டி நோக்கிய நகர்வின் முதல் படியாக 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என இந்தியப் பிரதமரை தாம் கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 13ஐ நடைமுறைப்படுத்துமாறு கோரும் தமது தீர்மானத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் அவர் நிராகரித்துள்ளார்.

குறிப்பாக 13ஐ கோரும் கடிதத்தில் தாம் கையெழுத்திடப்போவதில்லை என இரா.சம்பந்தன் கூறியதாகவும் எனினும், இதற்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு, 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டுமெனக்கூறி அனுப்பப்பட்ட கடிதத்தில் இரா சம்பந்தனும் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதனிடையே இந்திய அரசாங்கத்தின் சுமார் 3000 கோடி ரூபாய் நிதிப் பங்களிப்புடன் வடக்கிற்கான புகையிரதப் பாதை புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணரட்ன தெரிவித்தார். 

புனரமைப்பு பணிகளைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தின் பின்னர் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான போக்குவரத்து நேரம் ஒரு மணித்தியாலம் குறைவடையும் எனவும் தெரிவித்தார்.


No comments