வடக்கு கல்வி முகாம்களில் தீர்மானமாகிறது

 


வடக்கின் கல்வி எப்படி இருக்கிறது?

வலை பதிவர் ஒருவரது ஆதங்கத்திலிருந்து

"கல்வி நிர்வாகத்தில் இராணுவ தலையீடு இருக்கின்றது ..குறிப்பாக இராணுவ புலனாய்வாளர்களின் தலையீடு இருக்கின்றது .

இந்திய தூதுவராலயத்தின் தலையீடு இருக்கின்றது . 

ஒட்டுக்குழுக்களின் ஆதிக்கம்  இருக்கின்றது. 

மேற்படி தரப்புகள் தான்  கல்வி அதிகாரிகளின் நியமனங்களை, இடமாற்றங்களை, வள பங்கீகளை தீர்மானிக்கின்றார்கள் 

இங்கே இராணுவ புலனாய்வாளர்கள், ஒட்டுக்குழுக்கள் , இந்திய தூதுவர் போன்றவர்களை  திருப்தி படுத்தி அவர்களுக்கு விசுவாசமாக நடந்தால் மட்டுமே அதிகாரத்திற்கு வர முடியும் 

இதுபோதாதென்று மேற்படி அதிகாரத்தை தக்க வைப்பதற்கும் தரப்புகளின் தயவு அவசியமாக இருக்கின்றது 

இதனால் தான் பேராசிரியர்கள் இராணுவ முகாம்களில் இராணுவ அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களின் தரிசனத்திற்கு காத்து இருக்கின்றார்கள் 

இந்திய தூதுவர் அலுவலகத்தில் தூதுவரின்   கண் அசைவுக்கு இயங்குகின்றார்கள் 

ஆசிரிய கலாசாலைகளில் டக்ளஸ் தேவானந்தா போன்ற நபர்களுக்கு  பாராட்டு விழாவை நடத்துகின்றார்கள்"


No comments