13தான் வேண்டும்?

 


13வது திருத்த சட்டத்திற்கு உயிர்ப்பூட்ட இந்திய துணைதூதரக ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்ட கட்சிகள் மட்டத்திலான கூட்டம் படுதோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினது ஆதரவு பெற்ற தரப்பொன்று சிவில் அமைப்புக்கள் பேரில் இந்திய தூதரகத்திற்கு படையெடுத்துள்ளது. 

இந்தியாவிற்கு பயணம்  மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடம் 13வது திருத்தச் சட்டத்தினை  நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் எனும் பேரில் கோத்தபாய ராஜபக்ச ஆதரவு தரப்பினர் இந்திய பிரதமர்  நரேந்திர மோடிக்கான  கடிதம் ஒன்றினை யாழ் இந்திய துணைதூதுவரகத்தில் இன்றைய தினம் கையளித்துள்ளனர்.

மகஜர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள்; பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை 13வது திருத்த சட்டம் குறித்து அதனால் வந்த மாகாண சபை கட்டமைப்பினை முழுமையாக அமுல்படுத்துமாறு சிவில்  சமூக பிரதிகளாக யாழ் இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்

அவர்கள் அதை டெல்லிக்கு அனுப்பி ஒரு சாதகமான பதிலை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் முடிந்த வரையில்  13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு  கோரி இந்த கடிதத்தினை அனுப்பி இருக்கிறோம் என்றார்.

முன்னதாக யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா அரங்கில் கூட்டப்பட்ட கூட்டம் படுதோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments