சண்டித்தனத்தில் சாணக்கியன்?
மட்டக்களப்பில் வீதிப்போக்குவரத்துஅனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.
சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கல், ஊழலில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த தனியார் போக்குவரத்து பொறுப்பதிகாரி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவரை தாக்க முயற்சிகள் நடந்துள்ளது.
மட்டக்களப்பு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அனுமதிப்பதிரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளை தடைசெய்ய கோரி மட்டு தனியார் பஸ்வண்டி நிலையத்தில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்ததையடுத்து அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ருந்தார்.
பொலன்னறுவை கதுறுவெலவில் இருந்து காத்தான்குடி வரையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட பேருந்தினால் மன்னம்பிட்டி விபத்தில் 11 பேர் உயிரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment