ரணிலுக்கு முடியாது!ஜூலிக்கு முடியும்!இந்திய பயணத்திற்கு முன்னதாக தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடாத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று (17) முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

சந்திப்பு தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழ்த் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுவதில் பெருமையடைகிறேன். உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக இலங்கை பாடுபடுவதால், அதிகாரப்பகிர்வு, காணி திரும்பப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான பதில்களைக் கண்டறிதல், பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை இலக்கு வைத்து சர்வதேசம் தலையிடுமென்ற பிரச்சாரங்களை முன்னெடுப்பதை பற்றி அமெரிக்க தூதர் விமர்சித்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவி;ன் சந்திப்பு அழைப்பினை முன்னணி நிராகரித்துள்ளது.தமிழரசுக்கட்சி மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் தரப்பு சந்திப்பிற்கு சந்தித்துள்ள போதும் புதிய தமிழ் தேசிய கூட்டணி தரப்பிற்கு அழைப்பு கிட்டியிருக்கவில்லையென தெரியவருகின்றது.


No comments