13 பெரிய கூத்து:தயாராகும் யாழ்ப்பாணம்!



13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களது தீர்வாக அறிவிக்க இந்திய பின்னணியில் பலத்த முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் சனிக்கிழமை வடகிழக்கிலுள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கெடுக்கும் வகையில் யாழ்.நகரில்  செல்வா மாநாட்டு மண்டபத்தில் இந்திய தூதரக பின்னணியில் மாநாடொன்றிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

புpள்ளையான் முதல் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்தியாவின் தலையீட்டுடன் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக அமையாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அந்த விடயத்தை சுட்டிக்காட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் உள்ள அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் நாட்டு தலைவர்களை சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



No comments