அரசியலிருந்து விலகுகிறறேன் - நெதர்லாந்துப் பிரதமர்
எதிவரும் இலையுதிர்காலத்திற்குப் பிறகு நடைபெறவுள்ள பொதுச் தேர்தலுக்குப் பின்னர் நான் அரசியிலிருந்து விலகப் போகிறேன் என நெதலாந்து பிரதமர் மார்க் ரூட்டே தொிவித்தார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றும்போது அவர் இக்கருத்தினை வெளியிட்டார்.
நெதர்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவரின் வாழ்க்கை முடிவைக் குறிக்கிறது. 2010ல் இருந்து நான்கு கூட்டணி அரசாங்கங்களுக்கு தலைமை தாங்கிய மார்க் ரூட்டே நெதர்லாந்தில் புகலிடக் கொள்கையை இறுக்குவது தொடர்பில் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவி வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பொதுத் தேர்தல் வரை இடைக்கால அடிப்படையில் தான் பதவியில் இருப்பேன் என்று மார்க் ரூட்டே கூறினார்.
தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் பதவியேற்கும் சந்தர்ப்பத்தில், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறினார்.
இதன்பின்னர் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான தனது மைய-வலது மக்கள் கட்சி (விவிடி) பட்டியலில் தான் தலையிட மாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நவம்பர் நடுப்பகுதி வரை விரைவில் நடைபெறாது என டச்சு தேர்தல் கவுன்சிலின் அறிவித்துள்ளது.
ஆனால் ருட்டே இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார். எதிர்க்கட்சி அவரை இடைக்கால பிரதம மந்திரியாக பதவி நீக்கம் செய்ய முயல்கிறது. இரண்டு இடதுசாரி எதிர்க்கட்சிகளும், Geert Wilders இன் சுதந்திரத்திற்கான தீவிர வலதுசாரிக் கட்சியும் ரூட்டே மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளன.
இந்த பிரேரணை வெற்றிபெற வேண்டுமானால், ருட்டேவின் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியாவது ஆதரிக்க வேண்டும்.
Post a Comment