வடக்கு சட்டத்தரணிகள் நாளை நீதிமன்று செல்லார்!இலங்கையின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் அடையாளக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

போராட்டமானது நாளைய தினம் காலை முல்லைத்தீவு நீதிமன்ற முன்றிலில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்தே போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டம் தொடர்பில் இன்றைய தினம்  முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

கண்டனப் போராட்டத்தில் வடக்கு மாகாண இதர சட்டத்தரணிகள் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குருந்தூர் மலையில் நீதிமன்ற தடையினை பொருட்படுத்தாது கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பில் நேரடி தரிசிப்பொன்றை முல்லைதீவு நீதிபதி அண்மையில் முன்னெடுத்திருந்தார்.

அவ்வேளை பிக்குகள் சகிதம் வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர நீதிபதியிடம் விளக்கமளி;க்க முற்பட்ட போதும் நீதிபதி அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments