கிழக்கு ஆளுநருக்காக கத்தி தூக்கிய செல்வம்!

 


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பாகவும் அவருக்கு வழங்கிய பதவி பற்றியும் மிக இழிவாக அமைச்சர் நசீர் அஹமத் விமர்சித்திருப்பது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இப்படி மிக மோசமான ஒரு கருத்தை சொல்லி இருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

நாடு இங்கு இருக்கும் எல்லோரும் ஒன்று. வடக்கு கிழக்கு தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடம். அதே போன்று மலையகத்தில் இருக்கும் எங்களுடைய தமிழர்கள் வவுனியாவில் இருக்கிறார்கள். அவர்கள் மலையக தமிழர்கள் அல்ல, அவர்கள் வவுனியா தமிழர்கள்.

ஆகவே அந்தந்த பிரதேசங்களில் இருக்கிறவர்கள், அந்தந்த இடங்களில் ஆட்சி அமைப்பது, வேலை செய்வது அவர்களின் உரிமை.

அரசாங்க வேலை என்பது அந்தந்த ஊரில் வழங்குவதில்லை. அரச உத்தியோகத்தர்கள் இலங்கையின் எல்லா இடத்திலும் வேலை செய்வார்கள். 

செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர். அவர் ஒரு ஆளுநர் என்றும் பாராது ஒரு திறமையானவர் என்றும் பாராது அதே அரசாங்கத்திலிருந்து கொண்டு அவரை பொதுவெளியில் ஏளனம் செய்கின்ற அமைச்சர் மதிப்பிற்குரியவர் அல்ல.

வடக்கு கிழக்கிலும் குறிப்பாக கிழக்கிலே செந்தில் தொண்டமான் ஆளுநராக வந்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தன்னுடைய திறமையை நிச்சயம் காட்டுவார்.

வடக்கு கிழக்கு என்பது இணைந்த தாயகம். அதை பிரிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற உரிமை உங்களுக்கு இல்லை. வடக்கு கிழக்கு இணைந்து தாயகம் .தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகத்தான் பார்க்கப்படுகின்றதெனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


No comments