ஈபிடிபியும் அமெரிக்காவும் ஒன்றே!

 


ஈபிடிபியின் நிலைப்பாட்டை ஒத்ததாக தற்போது அமெரிக்க அரசின் நிலைப்பாடும் உள்ளது.எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளை காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்க தூதுவர் தமிழ் தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

எமது கட்சியின் நிலைப்பாடுகளே சரியானது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளருமான தெரிவித்துள்ளார்.

கடந்த 33 வருடங்களாக 13 இன் அவசியத்தை குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறிவந்த நிலையில் தற்போது தமிழ் கட்சிகள் காலங்கடந்தாவது அதனை ஏற்று இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியமை வரவேற்கத்தக்க விடயம். 

அதேநேரம் 13,வது திருத்தம் உள்ளிட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளி மட்டும் தான் என எமது கட்சியின் செயலாளர்நாயகம் அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அக்கால பகுதியில் சில தமிழ் அரசியல் தலைமைகள் 13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளியாக ஏற்காவிட்டாலும் தற்போது அதன் தார்ப்பரியத்தை அவர்களுக்கு காலம் உணர்த்தியுள்ளது. 

அதேவேளை 13 ஆவது திருத்தத்தை ஆரம்ப புள்ளியாக கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்களை முன்னெடுப்பதற்கு யாழ் மாவட்ட சிவில் அமைப்பினரும் கடிதத்தை யாழ் இந்தியத் துணை தூதரகத்தில் கையளித்துள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே கையில் உள்ளவற்றை இல்லாமல்செய்யும் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் எனவும், தமிழர் தாயப்பகுதியின் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இழுத்தடிப்பு செய்யும் அரசியல் கட்சிகள் அவற்றினை நிறுத்தவேண்டும் என்றும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரதித் தலைவருமான இரா.துரைரெட்னமும் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments