நீதி ஆடுவதாக சுமந்திரன் தெரிவித்தார்!
வடக்கில் சட்டத்தரணிகள் தமக்கெதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம், பணிநிறுத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் வடக்கு சட்டத்தரணிகள் பிரிவினைவாதிகள் என்றும் சாடியிருக்கிறார்.
நமது நீதித்துறை சுதந்திரமாகவும் வெளிப்புற அழுத்தங்களிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும் என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்கு தெரியும்.
அதற்கு வழக்கறிஞர்கள் சங்கம் விளக்கம் அளிக்கத் தேவையில்லை.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சில மாதங்களுக்கு முன்பு நாமபளுமன்றத்தில் நாட்டின் உயர் நீதிமன்றம் மணிக்கூண்டு போல் ஊசலாடுவதாக கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எமது பௌத்த பாரம்பரியத்தின் எச்சங்கள் எவ்வாறு குண்டர்களால் அழிக்கப்படுகின்றன என்பதை சட்டத்தரணிகள் சங்கம் வடக்குக்குச் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பழங்கால பௌத்த எச்சங்களை இடித்து சிவலிங்கத்தை வைத்து வழிபடும் முறையை அவதானிக்குமாறும் அவர்களுக்கு தெரிவிக்கின்றேன்.
இடிபாடுகளை புனரமைக்கும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதுடன் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் மீது பொய் வழக்குப் போட்டு, புனரமைப்புப் பணிகளை நிறுத்துமாறும் அதுவரை கட்டப்பட்டதை இடித்துத் தள்ளும் நிலையும் உள்ளது.
ஆனால் நமது பாரம்பரியத்தை அழிக்கும் பிரிவினைவாத குண்டர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு முன்பு வழக்கறிஞர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தேசப்பற்று இருந்தால் இவற்றையும் கவனிக்க வேண்டும் என்றும் சரத் வீரசேகரவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment