வெலிக்கடை நினைவுகள் தொடரும்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.
அதேவேளை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றிருந்தது
நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி , தங்கத்துரை , ஜெகன் , தேவன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவாக மலர் தூபி , பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் இருந்த சிங்கள சிறைக்கைதிகள் , சிறைக்காவலர்கள் உள்ளிட்ட தரப்பினர் மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்
சுதந்திர தமிழீழத்தை எனது கண்கள் பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சொன்ன குட்டி மணியின் இரு கண்களும் உயிரோடு பிடுங்கப்பட்டு nபூட்ஸ் கால்களால் அவை நசுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
Post a Comment