காணி பிடிப்பு நாளையும் தொடரும்!
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தப்;பட்டுள்ளது.
தமிழரான தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தனர்.
அவர்களை வழிமறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
எனினும், நில அளவை திணைக்கள அதிகாரிகள் ஆட்சேபனையினை பதிவு செய்ய விடுத்த கோரிக்கையினையடுத்து காணி உரிமையாளர், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆகியோர் ஒப்பமிட்டு கடிதத்தை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுளளனர்.
இதேவேளை வடமராட்சி கிழக்கில் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும், சுவீகரீக்கப்படவிருக்கின்ற அனைத்து காணிகளும் தனியாருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது.
Post a Comment