ரணில் திரும்பிய பின்னர் கைது! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இந்திய பயணத்தை முடித்து இலங்கை திரும்பியுள்ள நிலையில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அவர்களிடமிருந்து பல நாள் மீன்பிடி படகுகளi இரண்டையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.   

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட   இந்திய மீன்பிடி படகுகள் இரண்டும் அதில் இருந்த   இந்திய மீனவர்கள் ஒன்பது பேரும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக   காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பில் பேசப்பட்ட நிலையில் மீண்டும் இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.

No comments